டிக்டாக் தளத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்!! துயரத்தில் முடிந்தது!!
அல்பேனியா : ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் டிக்டாக் சமூக ஊடகத்திற்கு ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தளத்தில் பெண்ணுக்கும் மற்ற பயனர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர்கள் சந்தித்தனர்.வாக்குவாதம் முற்றி மாறி மாறி சண்டையிட்டனர்.
இந்த சண்டையில் 14 வயது சிறுமி மரணமடைந்தார்.மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டிருந்தது.
14 வயது சிறுமி உயிரிழந்ததை அடுத்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பெற்றோர் மற்றும் கல்வி நிலைய நிர்வாகிகள் இந்த சோகத்தில் டிக்டாக்கின் பங்கைச் சாடியுள்ளனர்.
இளைஞர்களிடம் டிக்டாக் ஏற்படுத்தும் தாக்கத்தை அவர்கள் கேள்வி எழுப்பினர்.
“சீனாவில் தளத்தில் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் வீடியோக்கள் இருக்கிறது.மற்ற நாடுகளில் மோசமான வீடியோக்கள் பல.ஆனால் அதற்கு பிள்ளைகள் காரணம் இல்லை.சமூகமே காரணம்.” என்று அல்பேனியா பிரதமர் Edi Rama கூறினார்.
மாணவர்களின் கல்விக்கும் உதவும் வகையில் உள்ள திட்டங்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
Follow us on : click here