உதடுகள் கருமையாக இருக்கிறதா? அதை சிவப்பாக மாற்றுவதற்கான சில வழிமுறைகள்!!
உதடுகள் கருமையாக இருப்பதற்கான காரணங்கள் குளிர்ந்த காற்று, வறண்ட குளிர் காலம் மற்றும் பனி ஆகியவை உதடுகளை பாதிப்படையச் செய்யும்.
உதட்டின் நிறம் நபருக்கு நபர் மாறுபடும்.குளிர்ந்த காற்று போன்று சூரிய ஒளி, புகையிலை மற்றும் புகைப்பழக்கம் போன்றவைகளும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
உதடுகளைச் சிவப்பு நிறமாக மாற்ற சில குறிப்புகள் :
குளிர்ந்த காலங்களில் உதடுகள் வறட்சியாக காணப்படும்.குளிர்ந்த மாதங்களில் தாகம் எடுக்கும் வரை இல்லாமல் அடிக்கடி தண்ணீர் அருந்துவது நல்லது.சுவையான புத்துணர்ச்சியூட்டும் குடிநீராக மாற்ற தண்ணீரில் வெள்ளரி அல்லது எலுமிச்சை துண்டுகளை சேர்த்து குடித்தால் உதட்டின் நிறம் பாதுகாக்க உதவும்.
எலுமிச்சை இயற்கையாக ப்ளீச்சிங் தன்மை கொண்டது.இது கருப்பான உதடுகளை ஒளிரச் செய்யும்.உதட்டில் ஏதேனும் காயம் இருந்தால் இதை தவிர்ப்பது தான் நல்லது ஏனெனில் இதன் அமிலத்தன்மை சருமத்தை பாதிக்கக்கூடும்.
எலுமிச்சையை நேரடியாக உதட்டில் பயன்படுத்த வேண்டாம். அதேபோல இறந்த செல்களை வெளியேற்ற உதவுவதால் நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டாம்.
பாதாம் ஆலிவ் மற்றும் தேங்காய் எண்ணெய்களை உதடுகளுக்கு பயன்படுத்தலாம்.
இந்த வகை எண்ணெய்களால் மசாஜ் செய்வது உதட்டை ஈரமாக வைத்திருக்க உதவும். அதோடு உதடுகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் இது உதவியாக இருக்கும்.
தோல் பிக்மென்டேஷனுக்கு மாதுளைச்சாறு சிறந்தது. இது இயற்கையாகவே கருமையான உதடுகளை மாற்றி ஒளிரச் செய்யும்.
மாதுளை சாறு ஒரு டீஸ்பூன் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டையும் கலந்து உதட்டில் தடவி ஐந்து நிமிடங்களுக்குப் பின் சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் கருமை நீங்கி கலராக மாறுவதைக் காணலாம்.
அதேபோல ஸ்ட்ராபெரி பழங்களை பயன்படுத்தி வந்தால் கருமை நீங்கும்.
அவற்றை நசுக்கி அந்த சாறை உதடுகளில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் கருமை நிறம் மாறும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக உதடுகளை ஸ்க்ரப் செய்வது, லிப் பாம் பயன்படுத்துவது, லிப் மாஸ்க் போடுவது என சரியாக செய்து வந்தால் உதடுகள் வறட்சி, கருமை நிறம் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.
Follow us on : click here