இளம் வயதிலேயே பித்த வெடிப்பு பிரச்சனையால் கவலையா..??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!

நம் பாதங்களை முறையாக பராமரிக்க தவறினால், இளம் வயதிலேயே விரிசல்கள் ஏற்பட்டு, அவற்றின் அழகைக் கெடுக்கும். வறண்ட பாதங்கள் அதிக விரிசல்களையும் வலியையும் ஏற்படுத்தும்.
பொதுவாக பாதங்களில் விரிசல்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை எடை அதிகரிப்பு, நீரிழப்பு, தொற்று மற்றும் போதுமான தண்ணீர் குடிக்காதது போன்ற காரணங்களாலும் பாதங்களில் விரிசல் ஏற்படலாம். நாம் விரிசல் அடைந்த பாதங்களை மீண்டும் அழகாகவும் மென்மையாகவும் மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றி பயனடையலாம்.
வெடிப்புள்ள பாதங்களை குணப்படுத்த இந்த வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றவும். இதைத்தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வெடிப்புள்ள பாதங்கள் நிச்சயமாக மறையும்.
தேவையான பொருட்கள்:
✨️ நல்லெண்ணெய்
✨️ மஞ்சள் தூள்
உபயோகிக்கும் முறை:
👉 ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணையை எடுத்துக் கொள்ளவும்.
👉 அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை கலந்து, பாதங்களில் தடவினால் வெடிப்புகள் நீங்கும்.
👉 இரவு தூங்கச் செல்வதற்கு முன் இந்த எண்ணெய் கலவையை பாதங்களில் பூசுவது நல்ல பலனைத் தரும்.
தேவையான பொருட்கள்:
✨️ தேங்காய் எண்ணெய்
✨️ வேப்பிலை
✨️ வேப்பம் பூ
உபயோகிக்கும் முறை:
👉 ஒரு தேக்கரண்டி வேப்பிலை பொடி மற்றும் வேப்பம்பூ பொடியை எடுத்துக் கொள்ளவும்.
👉 பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி சூடு படுத்தவும்.
👉 இதில் வேப்பிலை பொடி மற்றும் வேப்பம்பூ பொடியை சேர்த்து நன்றாக கலக்கவும்.
👉 இதை ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து பின்னர் ஆறிய உடன் பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தடவினால் வெடிப்புகள் மறையும்.
தேவையான பொருட்கள்
✨️ மருதாணி இலைப் பொடி
✨️ மஞ்சள் தூள்
உபயோகிக்கும் முறை:
👉 மருதாணி இலைகளை நன்றாக காய வைத்து பின்னர் மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
👉 பின்னர் அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.
👉 பின்னர் அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பாதங்களில் தடவினால் வெடிப்பு குறையும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan