ஜிம்முக்கு போறவங்களா நீங்க...!! அப்போ இந்த அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!!!
இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது. நாம் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டாலே பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். இதற்கு நாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது பீடி, சிகரெட், மது மற்றும் பிற போதைப் பொருட்களைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான சத்தான உணவை சரியான அளவில் உட்கொள்வதையும் குறிக்கிறது.சரியான நேரத்தில் சாப்பிடுவது, சரியான நேரத்தில் தூங்குவது, சரியான நேரத்தில் எழுந்திருப்பது, தினமும் உடற்பயிற்சி செய்வது, சுறுசுறுப்பாக இருப்பது என பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் இவை அனைத்தும் முக்கியம். அதே நேரத்தில், தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம். ஜிம்மிற்குச் சென்று பயிற்சிகளைச் செய்யலாம் அல்லது வீட்டிலிருந்தே எளிய முறையில் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.இருப்பினும், உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளரிடம் சென்று உங்களுக்கு ஏற்ற பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு அதற்கேற்ப செயல்படுவது சிறந்தது.
நீங்கள் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்யத் தொடங்கினால், உங்கள் உணவுப் பழக்கத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் முக்கியமாக நீங்கள் உடற்பயிற்சி செய்யத் தொடங்குவதற்கு முன் என்ன சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
உடற்பயிற்சி செய்யும் போது அசௌகரியத்தை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்க வேண்டும். உங்கள் உணவில் கவனம் எழுதினால் மட்டுமே உடற்பயிற்சியின் மூலம் அதிக பலனைப் பெற உதவும்.எனவே, உடற்பயிற்சிக்கு முன் இந்த உணவுகளைத் தவிர்க்கவும்.
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்
உடற்பயிற்சி செய்வதற்கு முன், லாக்டோஸ் மற்றும் அதிக புரதம் உள்ள பாலை நீங்கள் ஒருபோதும் உட்கொள்ளக்கூடாது. இது செரிமான ஆரோக்கியத்தை பாதிக்கிறது.உடற்பயிற்சி செய்த பிறகு பால் குடிக்கலாம். மேலும், அதிக கொழுப்புள்ள பால் பொருட்களான சீஸ், உடற்பயிற்சிக்கு முன் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
கொழுப்பு நிறைந்த உணவுகள்
பர்கர், பீட்சா, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் பிரஞ்சு ஃப்ரைஸ் போன்ற உணவுகளை உடற்பயிற்சி செய்வதற்கு முன் தவிர்க்க வேண்டும்.இவற்றில் கொழுப்புச் சத்து அதிகம். இவற்றுடன் சிப்ஸ், சமோசா போன்ற எண்ணைய் பதார்த்தங்களும் அடங்கும்.இவை வயிறு உப்புசம், குறைந்த ஆற்றல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
தயிர்
இதில் புரதம் மற்றும் லாக்டோஸ் அதிகம் உள்ளது. இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது தேவையான ஊட்டச்சத்தை அளித்தாலும், அதன் கிரீம் மற்றும் அடர்த்தி உடற்பயிற்சி செய்யும்போது உப்புசம், தசைப்பிடிப்பு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இனிப்பு உணவுகள், குளிர்பானங்கள்
சர்க்கரை உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் எப்போதும் பூஜ்ஜிய கலோரிகளைக் கொண்டிருக்கின்றன. அதாவது, ஊட்டச்சத்து இல்லை. இதை குடித்தவுடன் அல்லது சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்தால் ஆற்றல் குறைந்து, செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
நட்ஸ் மற்றும் விதைகள்
நட்ஸ் வகைகள் ஆரோக்கியமானதாக இருந்தாலும் கூட உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடுவது நல்லதல்ல.இதில் கொழுப்பு மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதனால் செரிமான கோளாறு, உப்புசம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.அதிகப்படியான கலோரிகள் உங்கள் ஆற்றலை திடீரென்று குறைக்கலாம் இதனால் முழுமையாக உடற்பயிற்சி செய்ய முடியாது.
எனவே மேற்கூறிய உணவுமுறைகளை முறையாக கடைப்பிடித்து உடற்பயிற்சி மேற்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.
Follow us on : click here :
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan