தொண்டை வலியால் சிரமப்படுறீங்களா...??? இதோ உங்களுக்கான வீட்டு வைத்தியம்...!!!

சிலருக்கு பேசும்போது, திடீரென தொண்டை கட்டிவிடும்.இதனால், சரியாக பேச கூட முடியாமல் சிரமப்படுவர்.மேலும் சிலருக்கு பேசிக் கொண்டே இருக்கும்போது தொடர்ந்து வறட்டு இருமல் ஏற்படும். இதுபோன்ற பிரச்சனைகளை வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்தே சரி செய்யலாம். இந்த தொண்டை வலியை குணப்படுத்த வெற்றிலை, கிராம்பு போன்ற பொருட்களை வைத்து வீட்டிலேயே வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:-
✨️ வெற்றிலை – ஒன்று
✨️ கிராம்பு – இரண்டு
✨️ மிளகு – இரண்டு
✨️ பெருஞ்சீரகம் – கால் தேக்கரண்டி
✨️ சுக்கு – ஒரு சிட்டிகை
செய்முறை விளக்கம்:-
👉 முதலில் வெற்றிலை, கிராம்பு, கருமிளகு, பெருஞ்சீரகம், சுக்கு போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும்.
👉 அதன் பிறகு வெற்றிலையில் இருந்து தண்டை அகற்றி நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.
👉 அடுத்து வெற்றிலையில் கிராம்பு, கருமிளகு, பெருஞ்சீரகம், சுக்கு சேர்த்து நன்றாக மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிடவும். இப்படி செய்தால் தொண்டைப் பகுதியில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.
👉 வெற்றிலையில் துளசி, ஓமவல்லி, மிளகு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் பகுதியில் அரிப்பு, கரகரப்பு போன்றவை நீங்கும்.
தொண்டை வலிக்கான மற்றொரு தீர்வு:
தேவையான பொருட்கள்:-
✨️ சுக்கு – ஒரு துண்டு
✨️ மிளகு – கால் டீஸ்பூன்
✨️ தண்ணீர் – ஒரு கண்ணாடி
செய்முறை விளக்கம்:-
👉 ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீரை ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் ஒரு துண்டு சுக்கை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.
👉 பிறகு அதில் கால் டீஸ்பூன் கருப்பட்டியைச் சேர்த்து கொதிக்கவிடவும். இந்த பானத்தை வடிகட்டி குடிக்க தொண்டை வலி குணமாகும்.
Follow us on : click here