சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிரபல பாடகர் Taylor Swift இசை நிகழ்ச்சி நடத்த விருப்பதாக அண்மையில் சிங்கப்பூர் விளையாட்டு நடுவம் தெரிவித்தது.
தேசிய விளையாட்டரங்கில் மார்ச் 2,3,4 ஆம் தேதிகளில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அது குறித்து கலாசார,சமூக,இளையர் துறை அமைச்சர் Edwin Tong வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
`சுவிஃப்ட்டிஸ்´ என்று Taylor Swift ரசிகர்கள் அழைக்கப்படுகின்றனர்.
“சுவிஃப்ட்டிஸ்!உங்களுக்கு நற்செய்தி! அனைத்தையும் ஒதுக்கிவிட்டு Taylor Swift – இன் இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்குங்கள்! இசை நிகழ்ச்சியைக் காண நீங்கள் தயாரா?´´ என்று அந்த வீடியோவில் கூறியிருந்தார்.
அதை பல நெட்டிசன்கள் கிண்டல் அடித்து நகைச்சுவையான கருத்துகளைப் பகிர்ந்தனர்.
மற்றொரு புறம் பிரபல BTS குழுவையும், பாடகர் Bruno Mars – யும் அழைக்கலாமே என்று ஒரு சிலர் கேட்டிருந்தனர்.
“Taylor Swift உடன் புகைப்படம் எடுக்க மறக்காதீர்கள்!´´
“ நீங்களும் அதை விளம்பரம் படுத்துகிறீர்களா?´´
சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்திற்கு அதிக மக்களை ஈர்க்க முயற்சிகளை மேற்கொண்டதாக Edwin கூறினார்.