சிங்கப்பூருக்கு S Pass/E Pass இல் செல்ல விரும்புபவரா நீங்கள்?
சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல E Pass, S Pass, NTS Permit, PCM Permit, Shipyard Permit என பல பாஸ்கள் உள்ளன. ஒவ்வொரு பாஸிற்கும் Advantages மற்றும் Disadvantages உள்ளன. அதில் S Pass, E Pass ஆகிய இரண்டிற்குமான Advantages மற்றும் Disadvantage களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
முதலில் Advantages பற்றி தெரிந்து கொள்வோம்.
ADVANTAGES :
🔸 சம்பளம் :
மற்ற பெர்மிட்களை விட S Pass, E Pass களுக்கு சம்பளம் அதிகம்.
🔸 தங்குமிடம் மற்றும் உணவு :
நீங்கள் டோர்மிட்டரியில் தங்காமல் வெளியில் தங்கிக்கொள்ளலாம். நீங்கள் ரூம் எடுத்தோ அல்லது Sharing Room இல் தங்கலாம். மற்ற பெர்மிட்டில் சென்றால் டோர்மிட்டரியில் தங்க வேண்டும். வெளியே தங்க அனுமதி அளிக்கப்படாது.
🔸 Dependant Pass இல் செல்லலாம் :
உங்களுடைய குடும்பங்களை Dependant Pass இல் அழைத்து வரலாம். அவுங்களுடன் சேர்ந்து இருக்கலாம். S Pass, E Pass தவிர்த்து மற்ற பெர்மிட்டில் சென்றால் Tourist visa மூலமாக மட்டுமே அழைத்து வர முடியும். அவர்கள் சிங்கப்பூரில் தங்க ஒரு மாதம் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். நீங்கள் renewal செய்தால் மேலும் ஒரு மாதம் மட்டுமே நீட்டிக்கப்படலாம்.
DISADVANTAGES :
🔸 அதிகபடியான செலவு :
நீங்கள் வெளியில் ரூம் எடுத்து தங்குவதால் அதற்கு குறைந்தது 400 முதல் 700 டாலர் வரை செலவாகும். இதனால் நீங்கள் சம்பாதிப்பதில் பாதி இதுக்கென்றே போய்விடும். S Pass, E Pass தவிர்த்து மற்ற பெர்மிட்டில் செல்பவர்களுக்கு அவர்களுக்கான சம்பளத்தில் மாதத்திற்கு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்வார்கள். அந்த தொகை நீங்கள் வெளியில் ரூம் எடுத்து தங்குவதை விட குறைவாக தான் இருக்கும்.மற்ற பெர்மிட்களை விட S Pass, E Pass க்கு செலவுகள் அதிகம்.
🔸 கோட்டா :
சிங்கப்பூரில் அவ்வப்போது விதிமுறைகளை மாற்றங்கள் கொண்டு வருவதாலும், சம்பள உயர்வாலும், கோட்டா பிரச்சனையாலும் உங்களுக்கு renewal கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.
நீங்கள் தாய்நாட்டிற்கு திரும்பிய பின் மீண்டும் நீங்கள் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்லும் போது நீங்கள் S Pass அல்லது E Pass இல் செல்லும் போது எவ்வளவு செலவு செய்தீர்களோ அதே கட்டணம் தான் வசூலிக்கப்படும்.நீங்கள் uturn worker ஆக இருந்தாலும் அதே தான் வசூலிக்கப்படும்.இதே நீங்கள் மற்ற பெர்மிட்டில் அதாவது டெஸ்ட் அடித்து சென்றாலோ, தாய்நாட்டிற்கு திரும்பிய பின் மீண்டும் சிங்கப்பூருக்கு uturn worker ஆக செல்லும் போது குறைவான பணமே செலவாகும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0