Founder’s Memorial எனும் சிங்கப்பூர் சிற்பிகள் பேருந்து சுற்றுலாக்களை ஏற்பாடு செய்துள்ளது. பேருந்து சுற்றுலாக்கள் சிங்கப்பூரின் வரலாற்றை எடுத்து கூறும்.
ஜூன் 18-ஆம் தேதி (நேற்று) முதல் சுற்றுலா பயணம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
இந்த சுற்றுலாவுக்கான 200 டிக்கெட்டுகள் ஆகஸ்ட் மாதம் வரை வாங்கப்பட்டு விட்டன.
இதற்கு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து ஏற்பாட்டாளர்கள் அதனை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.
அதில் வழிகாட்டிகளும் இடம்பெறுகின்றனர்.
1950-ஆண்டிலிருந்து 1970 – ஆம் ஆண்டுகள் வரை ஆசிரியர்களாக இருந்தவர்களின் வாழ்க்கை கதைகளை வழிகாட்டிகள் பகிர்ந்து கண்முன் நிறுத்துகின்றனர்.
அரும்பொருளகத்தில் கண்காட்சிகள், அன்றைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், அரசாங்க ஆவணங்கள், பழைய செய்தித்தாள்கள் போன்றவைகளை பார்க்கலாம்.
சிங்கப்பூர் ஒரு தனி நாடாக மாறியதை பற்றியும் அங்கு பங்கேற்பாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.
இது பங்கேற்பாளர்களுக்கு அன்றைய சிங்கப்பூர் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பையும் வழங்குகிறது.
இந்தப் பேருந்து சுற்றுலா பயணம் சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்களை ஏற்றி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது.