நீங்கள் சிங்கப்பூரை குறைந்த செலவில் சுற்றி பார்க்க வேண்டுமா? எப்படி?

நீங்கள் சிங்கப்பூரை குறைந்த செலவில் சுற்றி பார்க்க வேண்டுமா? எப்படி?

நீங்கள் சிங்கப்பூரில் குறைந்த செலவில் சுற்றி பார்க்க வேண்டுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியவில்லையா? அதைப் பற்றி தெளிவாக இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

வெளிநாடுகளுக்கு ஒரு முறையாவது சுற்றுலா சென்று வர வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால் அதற்கு ஆகும் செலவை கணக்குப் போட்டால் அட போங்கடா என்ற நிலைமைக்கு போய்விடுவோம்.வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல நிறைய நாடுகள் உள்ளன. அதில் சிங்கப்பூரும் ஒன்றும். சிங்கப்பூரை குறைந்த செலவில் எவ்வாறு சுற்றி பார்க்கலாம்? செலவுகளை எப்படி குறைப்பது? என்பதை தெளிவாக தெரிந்து கொள்வோம்.

டிராவல்ஸ்:

சிங்கப்பூருக்கு நீங்கள் டிராவல்ஸ் மூலம் செல்லாமல் சிங்கப்பூர் சிட்டிசன் மற்றும் PR போன்ற சிங்கபூரர்கள் மூலம் சென்றால் $30 முதல் $35 டாலர் வரை தான் செலவாகும்.

டிக்கெட்:

அடுத்ததாக,விமான டிக்கெட் எப்படி புக் செய்யலாம்? Sky scanner என்ற app இல் டிக்கெட் குறைவாக இருக்கும் பொழுது நீங்கள் புக் செய்து கொள்ளலாம்.டிக்கெட்டின் விலை அவ்வப்போது மாறி கொண்டே இருக்கும். அதற்கு ஏற்றார் போல் செயல்படுங்கள்.

ரூம்:

சிங்கப்பூரில் உள்ள ஹோட்டலில் ரூமிற்கான செலவு அதிகம்.
அதனால் நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து Sharing Room – இல் தங்கினால் உங்களுக்கான செலவுகளில் குறைய வாய்ப்புள்ளது.

சுற்றி பார்க்க:

சிங்கப்பூரைச் சுற்றி பார்ப்பதற்கு செல்லும் போது டாக்ஸி அல்லது கார் புக் செய்தால் அதிகமான செலவாகும். அதனால் நீங்கள் பொது போக்குவரத்தில் சென்றால் செலவு குறையும்.

சாப்பாடு:

இந்தியா உணவுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது சைனீஸ் உணவிற்கான விலை குறைவாக இருக்கும். அதனால் சைனீஸ் உணவுகளை நீங்கள் முயற்சி செய்வது நல்லது.

இவ்வாறு நீங்கள் உங்களுக்கு ஆகும் செலவைக் குறைத்து சிங்கப்பூரைக் குறைந்த செலவில் சுற்றி பார்க்கலாம்.

இது போன்ற முக்கியமான சுவாரஸ்ய தகவல்களைத் தெரிந்து கொள்ள `sgtamilan’ இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்…..