சிங்கப்பூர் ஹோட்டல் வேலைக்கு செல்ல ஆர்வம் உள்ளவரா நீங்கள்?அப்போ இதை தவறாமல் படியுங்கள்…..

சிங்கப்பூர் ஹோட்டல் வேலைக்கு செல்ல ஆர்வம் உள்ளவரா நீங்கள்?அப்போ இதை தவறாமல் படியுங்கள்.....

1. எந்த pass இல் சமையல் வேலைக்கு செல்லலாம் ?

TEP,TWP,NTS permit,S-pass,E-pass போன்ற ஐந்து பாஸ்களிலும் செல்லலாம்.

2.ஹோட்டல் field இல் என்னென்ன மாதிரியான வேலை இருக்கும்?


சமையல்,டிஷ் வாஷ், சர்வர்,Accountant உள்ளிட்ட அனைத்து வேலைகளும் இருக்கும்.

3.சம்பள விவரம்:


$1400 டாலர் முதல் $3500 டாலர் வரை சம்பளமாக கிடைக்கும்.நீங்கள் வேலை பார்க்கும் ஹோட்டலை பொறுத்து சம்பளம் மாறுபடும்.அத்துடன் உங்களுடைய திறமை, திறன் மற்றும் அனுபவம் பொறுத்து ஊதியமும் அதிகமாக கிடைக்க வாய்ப்புண்டு.
உங்களிடம் ஹோட்டல் வேலை பற்றி ஏஜென்ட்கள் கூறினால் முதலில் அவர்களிடம் அந்த வேலைக்கான முழு விவரத்தையும் தெளிவாக கேட்டு கொள்வது அவசியம்.சமையல் வேலை உங்களுக்கு தெரியும் பட்சத்தில் அவர்கள் கூறும் உணவுகளை சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.அதேபோல் டாக்குமெண்ட்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.

தேவையான டாக்குமெண்ட்கள் :


(1)Educational Certificate


(2) உங்களுக்கு சமைக்க தெரிந்த Veg&Non-veg உணவுகளை சமைப்பது போன்ற வீடியோ அனுப்ப வேண்டும்.அதனை போட்டோ எடுக்க வேண்டும்.அதை pdf file Format- இல் அனுப்ப வேண்டும். PDF Name உங்களுடைய பெயர் இருக்க வேண்டும்.

ஹோட்டல் வேலைக்கு உணவும்,தங்குமிடமும் இலவசம். இவ்விரண்டுமே இலவசம் என்பதால் செலவு இருக்காது.

நீங்கள் சமையல் சார்ந்த துறையை தேர்ந்தெடுத்தால் அதற்கு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு இருந்தால் தகவல் வெளியாகும்.நீங்கள் அந்த வேலைக்கு அப்ளை செய்ய வேண்டும் என்று நினைத்தால் தமிழ்நாட்டில் உள்ள ஏஜென்ட்களிடம் அல்லது உங்களுக்கு நம்பிக்கையானவரிடம் பணத்தை செலுத்தி சிங்கப்பூருக்கு செல்ல முயற்சியுங்கள்.

Ip, visa வராமல் முன்கூட்டியே பணத்தை செலுத்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.