நீங்க சிங்கப்பூரில் இருக்கீங்களா? இதை மறந்து விடாதீர்கள்!!

நீங்க சிங்கப்பூரில் இருக்கீங்களா? இதை மறந்து விடாதீர்கள்!!

நாம் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற பிறகு வருட கணக்கில் அங்கு இருக்க வேண்டியது வரலாம்.

அப்படி இருக்கும் பொழுது உங்களது பாஸ்போர்ட் காலாவதியாக அதிக வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய பாஸ்போர்ட்டின் காலாவதி தேதியை அறிந்திருப்பது மிகவும் அவசியம்.

நீங்கள் சிங்கப்பூரில் இருக்கும் பொழுது உங்கள் பாஸ்போர்ட் காலாவதி ஆவதற்கு ஆறு மாதங்களில் இருந்து மூன்று மாதங்களுக்குள் பாஸ்போர்ட்டை நிச்சயமாக புதுப்பிக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க தவறினால் உங்களுடைய தாய்நாட்டிற்கு திரும்புவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது.

உங்கள் பாஸ்போர்ட்டை எப்படி புதுப்பிக்க வேண்டும் என்பதை மிகவும் தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம்.

நீங்கள் வேலை செய்யும் கம்பெனி உங்களின் பாஸ்போர்ட் காலாவதி தேதியை தெரிந்து கொண்டு உங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க உங்களுக்கு தெரியப்படுத்துவார்கள்.

ஒரு சில கம்பெனிகள் அதனை உங்களுக்கு தெரியப்படுத்தவில்லை என்றாலும் நீங்கள் உங்களுடைய பாஸ்போர்ட்டின் காலாவதி தேதியை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் உங்களுடைய காலாவதி தேதி வருவதற்கு முன்னதாக கம்பெனியில் கேட்டு உங்கள் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டு நீங்களே புதுப்பித்து கொள்ள வேண்டும்.

உங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முதலில் அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்ய வேண்டும்.
அதற்கு முதலில் www.blsinternational.com
இந்த இணைய பக்கத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு உங்களுடைய பாஸ்போர்ட்(original) மற்றும் work permit (original) உங்களுடைய அப்பாயிண்ட்மெண்ட் copy உள்ளிட்டவைகளை எடுத்துக்கொண்டு நீங்கள் நேரடியாக சிம் லிம் டவரில் 14வது மாடிக்கு செல்ல வேண்டும்.

நீங்கள் அங்கு செல்லும் போது $137 சிங்கப்பூர் டாலர் எடுத்துச் செல்ல வேண்டும்.

அவர்களே உங்களுக்கு பாஸ்போர்ட்க்கான அனைத்து வேலைகளையும் செய்து உங்களுக்கு பாஸ்போர்ட் வரும் தேதியை தெரிவித்து விடுவார்கள்.

உங்களின் புதுப்பித்த பாஸ்போர்ட்டை நீங்கள் கொடுத்த முகவரிக்கு அனுப்பி விடுவார்கள்.அதற்கு பத்திலிருந்து பதினைந்து நாட்கள் ஆகும்.

இவ்வாறு சரியான முறையில் உங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பித்து கொள்ளுங்கள். இதுபோன்ற தகவலை அறிய நமது இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.