திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்துவோரா நீங்கள்!! அப்பொழுது இப்பதிவு உங்களுக்காக தான்!!

திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்துவோரா நீங்கள்!! அப்பொழுது இப்பதிவு உங்களுக்காக தான்!!

திருச்சி விமானநிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் கவனத்திற்கு, தற்போது லக்கேஜ் “செக்-இன்” ஆனது அட்வான்ஸ்டு “இன்-லைன்” டெக்னாலஜி என்பதால் கடைசி நேரத்தில் வந்து லக்கேஜ்ஜில் பிரச்சனை என்றால் பிளைட்டை மிஸ் செய்ய வாய்ப்பு உண்டு. எப்போதும் 3 மணி நேரத்திற்கு முன்னர் வருவது உகந்தது.

இதற்கு முன்னர் பயணிகள் விமானநிலையத்திற்குள் நுழைந்ததும் முதலில் தங்கள் லக்கேஜ்களை நீண்ட வரிசையில் நின்று ஸ்கேன் செய்து ஸ்டீக்கர் ஒட்டிய பின்னர் தங்களது விமானத்தின் போர்டிங் கவுண்டருக்கு செல்வார்கள்.

தற்போது இந்த நடைமுறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. சென்னை, துபய், சிங்கப்பூர் போன்று பயணிகள் தங்களது லக்கேஜ் உடன் நேரடியாகவே தங்களது விமானத்தின் போர்டிங் கவுண்டருக்கு செல்லலாம்.

அவர்கள் தற்போதுள்ள சென்ட்ரலைஸ்டு இன்-லைன் செக்-இன் சிஸ்டத்திற்கு லக்கேஜை அனுப்பி விடுவர். பின்னர் லக்கேஜ் ஸ்கேன் செய்யப்பட்டு தானாகவே பயணியின் விமானத்திற்கு வந்து லோட் செய்யப்படும்.

பயணிகள் ஒருவேளை தாமதமாக வந்து பயணியின் லக்கேஜில் ஏதும் பிரச்சனை இல்லை என்றால் பயணத்திலும் பிரச்சனை இல்லை.

ஒருவேளை பயணியின் லக்கேஜில் சந்தேகப்படும்படியான பொருட்களோ, தடை செய்யப்பட்ட பொருட்களோ தவறுதலாக இருக்கும் பட்சத்தில், அந்த லக்கேஜ் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு, அதில் உள்ள ஸ்டிக்கர் மூலம் பயணி அடையாளம் காணப்பட்டு, அந்தப்பயணியை அழைத்து வந்து அவர் முன்னிலையில் லக்கேஜ் திறந்து பரிசோதிக்கப்படும். இதற்கு காலதாமதம் ஆகும்.

இதனால் பயணி தன்னுடைய விமானத்தை தவறவிட வாய்ப்பு உண்டு. இதுபோன்ற அசாதாரணமான சூழலை தவிர்க்க பயணிகள் முன்கூட்டியே விமானநிலையத்திற்கு வருவது உகந்தது.

திருச்சி விமானநிலையத்தில் தங்கள் பயணம் எளிமையாகட்டும்!! இனிமையாகட்டும்!!