மலேசியா அரசாங்கம் விதிக்கும் எல்லைக் கட்டுப்பாடுகள் எந்த நாட்டிருக்கும் எதிரான பாரபட்சமான நடவடிக்கை அல்ல என்று அந்நாட்டு பிரதமர் anwar ibhrahim கூறியிருக்கிறார். வாராந்திர அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
“பயணத்துறை, பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றை விட மக்களின் நலனே அரசாங்கத்திற்கு முக்கியம்´´ என்று கூறினார். அனைத்து வெளிநாட்டு பயணிகளும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவர் என்று கூறினார்.இவ்வார இறுதியில் சீனாவிலிருந்து பெருமளவில் மலேசியாவிற்கு பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பக்கபடுகிறது.
கடந்த ஆண்டு சீனாவிலிருந்து முந்நூற்று முப்பத்து ஆறாயிரம் பயணிகள் மலேசியாவிற்கு வந்ததாக மலேசியா பிரதமர் அன்வர் கூறினார். நாட்டிற்குள் வரும் எல்லா பயணிகளுக்கும் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்படும் என்றும் மலேசியா அரசு தெரிவித்துள்ளது.