Part-time, Temporary ஆக வேலை செய்யும் ஊழியர்களின் சம்பளத்தை விட செலவுகள் அதிகமா? குறைவா?

சிங்கப்பூரின் DBS வருடாந்திர கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது.Part-time மற்றும் Temporary ஆக வேலை செய்யும் ஊழியர்களின் செலவுகள் பற்றி ஆய்வு நடத்தியது.

59 மற்றும் 77 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் தற்காலிக வேலையில் 2,500 வெள்ளிக்கும் குறைவான வருமானத்தை விட அதிகம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கருத்து கணிப்புபடி,தற்காலிக வேலைச் செய்யும் ஊழியர்களின் வருமானம் நிலையானதாக இல்லாததால் சேமிப்புகளைச் செலவு செய்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

மே மாத அறிக்கையின்படி,அவர்கள் தங்களின் சேமிப்பில் 1.7 மாத செலவுக்கு இருந்ததாக தெரிய வந்துள்ளது.

அறிக்கையின்படி, 59 மற்றும் 77 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் வருமானத்தில் அதிகப்படியான சம்பளத்தைச் செலவு செய்கிறார்கள்.

மே மாத அறிக்கையின்படி,வருமானத்தில் 86 விழுக்காடு செலவுகளைப் பயன்படுத்திகிறார்கள்.

அவர்கள் வரவு செலவில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

பெரும்பான்மையான சிங்கப்பூரர்கள் நிலையான நிதி நிலையில் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

சுமார் 1.2 மில்லியன் சில்லறை வாடிக்கையாளர்களின் தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டது.

கருத்துகணிப்பு முடிவில்,Part-time மற்றும் Temporary ஆக வேலை செய்யும் ஊழியர்களின் சம்பளத்தைவிட அதிகமாக செலவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வருடாந்திர ஆய்வில் அவர்களின் சேமிப்பு ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.