உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 26 லட்சம் பேர் அதிக வேலை அழுத்தத்தால் உயிர் இழக்கிறார்கள் என்ற தகவலை சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டு அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
எந்தெந்த காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதையும் அதன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வாரத்திற்கு 55 மணி நேரம் வேலை செய்ய வேண்டும், ஆனால் குறிப்பிட்ட வேலை நேரத்தைவிட அதிக நேரத்திற்கு வேலை செய்ததால் சுமார் 7.44 லட்சம் பேர் இறந்துள்ளனர்.
சுமார் 20.6 லட்சம் பேர் உடல்நிலை சரியில்லாமல் நோயால் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 10.86 லட்சம் பேர் நச்சுவாயு வெளிப்பாட்டால் இறந்துள்ளனர்.
கிட்டத்தட்ட 3.30 லட்சம் பேர் அலுவலக விபத்துகளால் உயிரிழந்துள்ளனர்.
இத்தகைய காரணங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது.