இணையத்தில் வைரலான SMRT நிறுவனத்தில் வேலைக்கு குவிந்த விண்ணப்பங்கள்…!!

இணையத்தில் வைரலான SMRT நிறுவனத்தில் வேலைக்கு குவிந்த விண்ணப்பங்கள்...!!

சிங்கப்பூர்: டிக்டாக் தளத்தில் நெட்டிசன்களின் குறைகளை குவித்த ஒரு சிங்கப்பூர் வேலை விளம்பரம் 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.

சிங்கப்பூரின் SMRT நிறுவனத்தின் வேலை விளம்பரம் LinkedIn தளத்தில் வெளியிடப்பட்டது.

அதில் பொறுப்புகள் – சேவை புதுமை, தகவல் தொடர்பு நிபுணர் போன்ற இடங்களுக்காக வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்ட பணியிடங்களில் மக்களை ஈர்க்கும் உள்ளடக்கத்தை உருவாக்குதல், பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய்தல், தலைமைக் குழுவிற்கு ஆலோசனை வழங்குதல் போன்ற வேலைகள் அடங்கும்.

இந்த விளம்பரத்தை பார்த்த பென்யாப் என்ற பயனர் ஒருவர் இது குறித்து தனது Tiktok பக்கத்தில் பகிர்ந்தார்.

இது போன்ற வேலைகளுக்கு நான் சேர மாட்டேன்.இது நான்கு பேர் செய்யக்கூடிய வேலை என்று கூறியிருப்பார்.

மேலும் தலைமை குழுவுக்கு ஆலோசனை வழங்குவது ஒரு மூத்த மேலாளரின் வேலை. அது எப்படி 2 வருட பணி அனுபவத்தில் ஆலோசனை வழங்க முடியும் என்று தனது கருத்தை டிக்டாக்கில் பகிர்ந்தார்.

அவரின் அந்த வீடியோவானது 125,000 க்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டது.

மேலும் 3,700க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது.

பென்யாப்பின் மதிப்பாய்வு பலரிடமிருந்து ஆதரவைப் பெற்றது.

சில நிறுவனங்கள் பொது விடுமுறை நாட்களில் விடுமுறையை சலுகையாக வழங்குவதாக சிலர் கூறினர்.

இந்த வழக்கில், SMRT தனது விளம்பரத்தை பாதுகாத்துள்ளது.

வேலை விளம்பரத்தில் நிறைய கடமைகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவை வேலை பொறுப்புக்குத் தேவையான பரந்த அளவிலான திறன்களை எடுத்துக்காட்டுகின்றன என்று நிறுவனம் தெரிவித்தது.

இந்தப் பணிக்கு ஏற்கெனவே 100 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us on : click here ⬇️