ஆப்பிள் விஷன் ப்ரோ இப்போது சிங்கப்பூரில் விற்பனைக்கு வந்தாச்சு!!

ஆப்பிள் விஷன் ப்ரோ இப்போது சிங்கப்பூரில் விற்பனைக்கு வந்தாச்சு!!

ஆப்பிள் விஷன் ப்ரோ இப்போது சிங்கப்பூரில் விற்பனைக்கு வந்தாச்சு!!

சிங்கப்பூர்: Apple Vision Pro என்ற கருவி முதன் முதலில் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது. இப்போது சீனா, ஹாங்காங், ஜப்பான் மற்றும் சிங்கப்பூரில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் கிடைக்கின்றன.

இதன் மூலம், கம்ப்யூட்டர் இல்லாமல், இந்த கருவியை உங்கள் தலையில் மாட்டிக்கொண்டு எங்கிருந்து வேண்டுமானாலும் உங்கள் வேலையைச் செய்யலாம். நீங்கள் அதில் செயலிகளையும் பயன்படுத்தலாம். மேலும் திரைப்படங்களையும் கண்டு மகிழலாம்.

இந்த மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட் மூலம், கம்ப்யூட்டர் இல்லாமல் ஸ்பேஷியல் போட்டோ, வீடியோ மற்றும் ஆடியோ அம்சங்களுடன் கூடிய ஆப்பிள் 3டி கேமரா மூலம் நீங்கள் வேலை செய்யலாம், மீட்டிங்கில் கலந்து கொள்ளலாம், திரைப்படங்களைப் பார்க்கலாம் மற்றும் நிஜத்தில் பார்க்கும் நிகழ்வுகளைச் சேமிக்கலாம்.

இதன் மூலம் ஸ்பேஷியல் போட்டோ மற்றும் ஸ்பேஷியல் வீடியோக்களை 3D தரத்தில் எடுக்கலாம். ஸ்பேஷியல் ஆடியோ மூலம் ரெக்கார்டிங் செய்வது, ரெக்கார்டிங்குகளை மீண்டும் பார்க்கும் போது அதே தருணத்தில் இருப்பது போன்ற நிஜ வாழ்க்கை அனுபவத்தை உங்களுக்கு வழங்குகிறது.
மேலும் இதை பயன்படுத்துவோருக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மக்கள் பணிபுரியும் முறையிலும், ஒருவருக்கொருவர் பணிபுரியும் விதத்திலும் மாற்றத்தை கொண்டு வரும் என நிறுவனம் நம்புகிறது.

சிங்கப்பூரில் Apple Vision Pro சாதனத்தின் விலை $5,299 இல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.