கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய மோசடி தடுப்பு அம்சங்களால் மக்கள் நிம்மதி…!!!

கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய மோசடி தடுப்பு அம்சங்களால் மக்கள் நிம்மதி...!!!

சிங்கப்பூர்: உலகளாவிய இணைய மோசடிகளை தடுக்க கூகுள் நிறுவனமானது ஆண்ட்ராய்டு மென்பொருளில் இயங்கும் கைபேசிகளுக்கு சில மோசடி எதிர்ப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் முன்னோட்ட அடிப்படையில் 2 அம்சங்களை வெளியிட்டுள்ளது.

இதன் உதவியால் பயனர்கள் தெரியாத வெளிநாட்டு எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை தடுக்கலாம்.

அறியப்படாத மூலங்களிலிருந்து பயன்பாடுகளைப் பதிவிறக்குவதைத் தடுக்க கூடுதல் அம்சங்களும் உண்டு.

Google Play Protect எனப்படும் பாதுகாப்பு அம்சம் அறியப்படாத மூலங்களிலிருந்து பயன்பாடுகள் பதிவிறக்கப்படுவதைத் தடுக்கிறது.

ஆனால், மோசடிகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் அந்த பாதுகாப்பு அம்சத்தை அறியாமல் முடக்கிவிடுகிறார்கள்.

பயனர்கள் இனி அம்சத்தை முடக்க முடியாது. குறிப்பாக தொலைபேசிகளின் வழி நடக்கும் மோசடிகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும்.

கூகுளின் புதிய மோசடி எதிர்ப்பு அம்சங்கள் வரும் மாதங்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளின் மோசடி எதிர்ப்பு அம்சங்களால் மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.