சிங்கப்பூரில் மீண்டும் வேலையிட விபத்து!! ஒருவர் பலி!!

சிங்கப்பூர் : ஜீ சியாட் பகுதியில் மார்ச் 3-ஆம் தேதி(நேற்று) வேலையிடத்தில் விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் 66 வயதுடைய போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக Road Roller வாகனத்தை இயக்கிய 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவரை கைது செய்ததாக காவல்துறை கூறியது.
இந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர் காவல்துறைக்கும், குடிமைத் தற்காப்புப் படைக்கும் நேற்று சுமார் 4 மணியளவில் தகவல் வந்ததாக தெரிவித்தன.
போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
Follow us on : click here