சிங்கப்பூரில் மூத்தோர்களுக்காக மற்றுமொரு புதிய திட்டம்!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசு மூத்த குடிமக்களின் நலன்களில் அக்கறை கொண்டு பலவித முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் ஆரோக்கியமான, சத்தான உணவுகளை தேர்வு செய்ய முதியவர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் HEAL திட்டம் அதற்கான முயற்சியை சாத்தியமாக்குகிறது.
இந்த முயற்சியானது தேசிய அளவில் அமலில் உள்ள துடிப்பாக மூப்படையும் திட்டத்தின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது.
முதியவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களை அறிய மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர்கள் சில கலந்துரையாடல்களை நடத்தினர்.
அவர்களில் மரின் டெரசில் உள்ள துடிப்பாக மூப்படையும் நிலையமான Goodlife Makan மூத்தவர்களும் உள்ளனர்.
இந்த இடத்தில் பெரியவர்கள் ஒன்றாக சமைத்து சாப்பிடுவார்கள்.முதியவர்கள் தனிமையில் வாடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர்களின் மன ஆரோக்கியத்தை பராமரிக்கும் அதே வேளையில் அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள சில குறிப்புகளை வழங்கியுள்ளனர்.
இதை பயன்படுத்தி அவர்கள் எந்த வகையான உணவைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து தெரிந்து கொள்வர்.
Follow us on : click here