இந்தியாவில் இன்று பிப்ரவரி,1-ஆம் தேதி செவ்வாய் கிழமை 2023-2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார்.
பான் கார்டு :
பான் கார்டு பொது அடையாள அட்டை இனி அரசு நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படும்.
கர்நாடக மாநில பாசனம் மற்றும் குடிநீர் திட்டம் :
கர்நாடக மாநிலத்திற்கு பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ரூபாய் 5,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மாநில அரசுகளுக்கு வட்டியில்லா கடன் :
மாநில அரசுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். வட்டியில்லா கடன் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
புதிதாக செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் :
இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளையும் சேர்த்து,செவிலியர்களுக்காகவும் கல்லூரிகள் அமைக்கப்படும்.157 செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்பட போவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார். மருத்துவ துறை ஆய்வுகளை ஊக்குவிப்பதற்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
தேசிய டிஜிட்டல் நூலகம் :
இந்தியாவில் சிறுவர்களுக்காவும், பெரியவர்களுக்காகவும் நூலகம் திறக்கப்படும். இவர்களுக்காக தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட போவதாகவும் தெரிவித்தார்.
மீனவர் நலன் :
இந்த பட்ஜெட் அறிக்கையில் மீனவர் நலனுக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இவர்கள் நலனுக்காக 6000 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ரயில்வே துறை :
ரயில்வே துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-2014 ஆண்டிற்கான ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டதை விட 9 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தோட்டக்கலைத் துறை வளர்ச்சி :
தோட்டக்கலைத் துறை வளர்ச்சிக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 2, 200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
புதிய விமான நிலையங்கள் :
புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று என்று தெரிவித்தார்.50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
5ஜி சேவை ஆய்வகங்கள் :
இந்தியாவில் 5ஜி சேவைகளுக்காக ஆய்வகங்கள் அமைக்கப்படும். மொத்தம் 100 ஆய்வகங்கள் 5ஜி சேவை மேம்பாட்டிற்காக அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
வருமான வரி யார் செலுத்த தேவையில்லை?
இந்தியாவில் இனி ஆண்டு வருமானமாக ரூபாய் 7 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று அறிக்கையில் தெரிவித்தார்.
மத்திய அரசு கடன் வாங்க முடிவு :
மத்திய அரசு 2023-2024 ஆம் ஆண்டு நிதிக்காக கடன் வாங்க முடிவு செய்துள்ளது.ரூபாய் 15.43 லட்சம் கோடி கடன் வாங்க முடிவெடுத்துள்ளது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இறக்குமதி வரி உயர்வு :
பொருட்களின் இறக்குமதி வரியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி, வைரம்,பித்தளை, சிகெரட் முதலிய பொருட்களின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டிருக்கிறது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இறக்குமதி வரி குறைவு :
பட்ஜெட் தாக்கலில் ஒரு சில பொருட்களின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் சில பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்,கேமரா, தொலைக்காட்சி முதலிய பொருள்களுக்கான உதிரி பாகங்களின் இறக்குமதி வரி 2.5% சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் :
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான வரம்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் உச்சபட்ச வரம்பாக ரூபாய்.15 லட்சத்திலிருந்து ரூபாய்.30 லட்சம் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.