சான் பிரான்சிஸ்கோ – வை தாயகமாக கொண்டு சிங்கப்பூரில் கடந்த 27 வருடமாக ( 1996 – 2023) நடத்தி வரப்பட்ட SPINELLI காபி நிறுவனங்கள் தனது அனைத்து கிளை நிறுவனங்களையும் மூடவுள்ளதாக தெரிவித்து உள்ளது.
மேலும் சிங்கப்பூரில் இருக்கும் அதன் இணை பிராண்ட் நிறுவனங்களையும் மூடவுள்ளதாக நேற்று 29 நவம்பர் அன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளது.
A Spinelli joint , Aperia Mall , Galaxis மற்றும் MYP, Ocean Financial Centre போன்றவை இதன் இணை நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் டிசம்பர் 15 அன்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் அமைந்திருக்கும் தனது இரண்டு கிளைகளையும் மூட உள்ளதாக அறிவித்து உள்ளது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் அனைத்து கிளைகளும் மூடப்படும்.
2018 இல் இருந்து ஏற்பட்ட தொடர் நிதி இழப்பால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
சிங்கப்பூரில் கடந்த அக்டோபர் மாதம் இதே போன்ற பிரபல காபி நிறுவனமான Flash Coffee சொந்த காரணங்களால் தனது அனைத்து நிறுவனங்களையும் மூடியதும் குறிப்பிடத்தக்கது.