மிக உயரமான சிகரத்தை ஏற புதிய விதிமுறைகள் அறிவிப்பு!!
ஜப்பான் அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதை விட அங்கு அதிக செலவுகள் செய்பவர்களை ஈர்ப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும் என யாமானாஷி வட்டாரத்தின் ஆளுநர் கூறியுள்ளார்.
ஜப்பானின் மிக உயரமான சிகரத்தைக் கொண்ட ஃபுஜி மலையேறும் காலம் தற்போது ஆரம்பமாகி உள்ளது.
இந்நிலையில் அங்கு செல்வதற்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு மலையேறுவதற்கென இனி கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும் ஒரு நாளுக்கு 4000 பேர் மட்டுமே மலையேற அனுமதி அளிக்கப்படும்.
அதற்கான அதிகபட்ச வரம்பை அறிவித்துள்ளது.
அங்கு ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக இந்த புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.
நோய் தொற்று காலக்கட்டத்திற்கு பிறகு அங்கு வருகைத் தருவோர்களின் எண்ணிக்கை கூடியுள்ளதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை நினைப்பதாக, சுற்றுச்சூழல் மீது உள்ள அக்கறையை அதிகாரிகள் வெளிப்படுத்தினர்.
Follow us on : click here