செவிலியர்களை கௌரவிக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்ட ஏஞ்சல் திட்டம்...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சுமார் 4,700 அனுபவம் வாய்ந்த செவிலியர்கள் அங்கீகாரம் பெற்றுள்ளனர்.
46 வயதை எட்டிய மற்றும் குறைந்தது 5 ஆண்டுகள் பொது சுகாதாரத் துறையில் பணியாற்றிய செவிலியர்கள்
கௌரவிக்கப்பட்டனர்.
செவிலியர்களின் இரக்கம்,சேவை மற்றும் விசுவாசத்தை அங்கீகரிக்கும் ஏஞ்சல் திட்டத்தின் கீழ், அவர்கள் 5,000 முதல் 15,000 வெள்ளி வரையிலான பரிசைப் பெற்றனர்.
செவிலியர்களின் பணி இன்றியமையாத ஒரு மகத்தான சேவை என்று சொல்லலாம். மருத்துவமனைகளில் நோயாளிகளையும், காயமடைந்தவர்களையும் அன்புடனும் பரிவுடன் கவனிப்பதையே வேலையாகக் கொண்டவர்கள்.
மேலும் கொரோனா காலத்தில் அவர்கள் ஆற்றியச் சேவை மிகப்பெரியது.பெரும்பாலான உயிர்களை காப்பாற்றிய கடவுள் என்று சொன்னால் அது மிகையாகாது.
எனவே சுகாதார அமைச்சகம் அவர்களின் சேவையை கௌரவிக்கும் பொருட்டு ஏஞ்சல் திட்டத்தை இந்த ஆண்டு தொடங்கியுள்ளது.
செவிலியர் பணியில் புதிதாக சேருபவர்களை ஈர்ப்பதற்காகவும்,அவர்களின் நீண்ட கால சேவையை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த விருதானது வழங்கப்படுகிறது.
Follow us on : click here