ஆண்ட்ராய்டு மால்வேர் மோசடி……மோசடியில் இருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?……

சிங்கப்பூரில் செப்டம்பர் மாதம் மட்டும் குறைந்தது 43 பேர் டிராவல் பேக்கேஜ்க்கான விளம்பரங்களை உள்ளடக்கிய ஆண்ட்ராய்டு மோசடிகளில் சுமார் 1.2 மில்லியன் சிங்கப்பூர் டாலர்களை இழந்துள்ளனர்.

இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் Facebook அல்லது Instagram-ல் Cruises, Tour Packages, Concert tours மற்றும் Durian tours பற்றிய விளம்பரங்களை பார்த்து அதை தொடர்பு கொள்வார்கள்.

மோசடிக்காரர்கள் அவர்களை Whatsapp மூலம் தொடர்பு கொண்டு Android Package Kit file-ஐ டவுன்லோட் செய்ய அறிவுறுத்துவார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் முன்பதிவிற்காக கட்டணம் செலுத்த PayNow அல்லது Bank Transfer செய்யும்படி அறிவுறுத்தப்படுவார்கள்.

பின்னர் அவர்களது வங்கி கணக்குகளில் இருந்து அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடந்ததை கண்டறிவார்கள்.

இது போன்ற மோசடிகளில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ScamShield மற்றும் Anti-virus app களை Install செய்திருக்க வேண்டும் என்று SPF தெரிவித்துள்ளது.

Google Play Store மூலம் ம‌ட்டுமே app-களை டவுன்லோட் செய்யுமாறு காவல்துறை அறிவுறுத்தியது.

ஒருவேளை தீங்கிழைக்கும் app-ஐ டவுன்லோட் செய்திருந்தால், உடனடியாக மொபைலை flight mode-ல் மாற்றி, Wi-Fi switch off செய்யப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். பிறகு Anti-virus ஸ்கேனை இயக்க வேண்டும்.

வங்கி கணக்கு, சிங்பாஸ் கணக்கு மற்றும் CPF கணக்குகளில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடந்துள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். அத்தகைய பரிவர்த்தனைகள் நடந்திருந்தால் வங்கி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளிக்க வேண்டும்.

இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படவில்லை என்று உறுதி செய்த பிறகு தொலைபேசியை பயன்படுத்தலாம் என்றும், முன்னெச்சரிக்கையாக factory reset செய்து password-களை மாற்றுமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.