சிங்கப்பூரின் பாலஸ்டியர் உணவகத்தில் இருந்த அழையா விருந்தாளி!!

சிங்கப்பூரின் பாலஸ்டியர் உணவகத்தில் இருந்த அழையா விருந்தாளி!!

சிங்கப்பூரின் பாலஸ்டியரில் உள்ள cheese Story Mookata Buffet ஹோட்டலில் எலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக 8 world செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூர் உணவு அமைப்பின் முதற்கட்ட விசாரணையின் போது உணவு பாதுகாப்பில் விதிமீறல்கள் இருந்தது என்றும்,
உணவகத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.

உணவு பாதுகாப்பு என்பது பல தரப்புகளின் கடமை என்று உணவு அமைப்பு வலியுறுத்தியதாக 8 world செய்தித்தளம் குறிப்பிட்டது.

உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். உணவகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் உணவகங்களைச் சிங்கப்பூர் உணவு அமைப்பு கேட்டுக் கொண்டது.