சிங்கப்பூரின் அதிபர் நாற்காலியை பிடித்த இந்திய வம்சாவளி…..

சிங்கப்பூரில் செப்டம்பர் 1-ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்னம் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார். தேர்தலில் 70.40% சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். அவர் வெற்றி பெற்றதை தேர்தல் துறை அறிவித்தது. சிங்கப்பூரின் 9-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தர்மன் சண்முகரத்னத்தின் வயது 66. அவர் 1957-ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி பிறந்தார்.மனைவியின் பெயர் Jane Yumiko Ittogi.அவர் நான்கு குழந்தைகளுக்கு தந்தை.

அரசியல் வரலாறு:

சிங்கப்பூரின் மூத்த அமைச்சராகவும்,சமூக கொள்கைக்களுக்கான ஒருங்கிணைப்பாளராகவும், ஜூரோங் GRC ( தாமன் ஜூரோங்)நாடாளுமன்ற உறுப்பினராகவும், பணியாற்றியுள்ளார்.துணை பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.நிதி அமைச்சராகவும் பணி புரிந்தார்.கல்வி அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார்.

இவர் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2009-ஆம் ஆண்ட்டில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட எஸ் ஆர் நாதன் என்றழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் சிங்கப்பூரின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.