நேற்று முன்தினம் Amritsar விமான நிலையத்தில் இரவு 8.00 மணிக்கு புறப்பட வேண்டிய TR509 விமானம், மோசமான வானிலைக் காணப்பட்டதால் மாலை 4.00 மணியளவில் முன்னதாகவே புறப்பட்டு சென்றது. இதனால் 29 பயணிகள் விமானத்தைத் தவற விட்டனர்.
புறப்பட்ட விமானம் Scoot நிறுவனத்தின் விமானத்தைச் சேர்ந்தது. விமானத்தின் நேரம் மாற்றப்பட்டதால் 29 பயணிகளும் இந்தியாவிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து Scoot நிறுவனம், “ பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முன்கூட்டியே குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாக அவர்கள் கூறினர்´´. இச் சம்பவத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்பதாக Scoot நிறுவனம் தெரிவித்தது.
இதைப் பற்றி இந்திய ஊடகங்களில்,பாதிக்கப்பட்ட பயணிகள் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்ததாக தெரிவித்திருந்தது.