சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ஓர் முக்கிய அறிவிப்பு!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ஓர் முக்கிய அறிவிப்பு!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் ஈரானின் வான்வெளி போக்குவரத்து பயன்பாட்டை நிறுத்தியுள்ளது.

இந்த தகவலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் நேற்று (ஏப்ரல் 14) தெரிவித்துள்ளது.

இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளதாக கூறியது.அதற்கு காரணம் மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள சர்ச்சையே.

ஏப்ரல் 1-ஆம் தேதி இஸ்ரேல் ஈரானின் துணைத் தூதுரகத்தை தாக்கியது. இந்த தாக்குதலுக்கு 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அறிவித்திருந்தது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏப்ரல் 13-ஆம் தேதியன்று
ஈரான் 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது.

பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் மேலும் போர் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

சிங்கப்பூர் நேரப்படி ஏப்ரல் 13-ஆம் தேதி(நேற்று முன்தினம்) மதியம் 1 மணி முதல் அனைத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்கூட் விமானங்களும் ஈரானின் வான்வெளியைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக CNA செய்தியிடம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.

அவர்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்த வேண்டியதாக இருந்ததாக கூறியது.

அங்கு நிலவி வரும் சூழ்நிலையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கண்காணித்து வருவதாகவும் கூறியது.

தேவைப்பட்டால் விமான வழித்தடங்கள் மாற்றப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.