சிங்கப்பூரில் மத்திய சேமநிதி கணக்கு வைத்திருக்கும் சிங்கப்பூர் அல்லாதோர்களுக்கு ஓர் முக்கிய தகவல்.
இனி, சிங்கப்பூர் அல்லாதோர்களின் மத்திய சேமநிதி கணக்குகள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இது குறித்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாறாக குடியிருப்பாளர்களின் ஓய்வு, வீட்டு வசதி மற்றும் சுகாதார பாதுகாப்புக்கு கூடுதல் ஆதாரங்களை பயன்படுத்துவதில் கவனம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் மனிதவள மூத்த துணை அமைச்சர் Koh Poh Koon விளக்கம் தந்துள்ளார்.
குடியுரிமை பெறாதவர்கள் தங்கள் ஓய்வு மற்றும் சுகாதார தேவைகளுக்கு பொறுப்பு ஏற்று கொள்ள வேண்டும் என்று கூறினார்.சிங்கப்பூரை விட்டு நிரந்தரமாக வெளியேற முடிவு செய்யலாம் அல்லது நீண்ட காலத்துக்கு இங்கு அவர்கள் தங்குவார்களா என்பதும் கேள்வி குறியே. அதை எதிர்பார்க்க இயலாது என்றும் கூறினார்
குடியுரிமை வழங்கப்படாதவர்களின் கணக்குகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் மூடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.