வெடித்துச் சிதறும் எரிமலை..!!! ஆபத்தை உணராத மக்கள்..!!

வெடித்துச் சிதறும் எரிமலை..!!! ஆபத்தை உணராத மக்கள்..!!

இத்தாலியின் சிசிலி தீவில் வெடித்துச் சிதறும் மவுண்ட் எட்னா எரிமலையைக் காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. உலகில் அடிக்கடி வெடிக்கும் எரிமலைகளில் எட்னாவும் ஒன்று.

இந்த மாதம் 11ஆம் தேதி (பிப்ரவரி 2025) எரிமலை வெடிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், வெடித்துச் சிதறும் எரிமலைக்கு மத்தியில் அதிக மக்கள் கூட்டம் இருப்பது ஆபத்தானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான சுற்றுப்பயணங்கள் வழிகாட்டிகளுடன் தயாராக வருகின்றனர். ஆனால், மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், மீட்பு வாகனங்கள் செல்லும் வழிகள் மறைக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

எரிமலையில் மீட்புப் பணியாளர்கள் மற்றும் அவசர மருத்துவ வாகனங்கள் இருப்பது முக்கியம்.

அவற்றை மறைப்பது அனைவருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று கூறப்பட்டது.