சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் 40 அடி உயரத்தில் பாரந்தூக்கியில் சிக்கி கொண்ட ஊழியர்……கீழே இறங்க முடியாமல் பரிதவித்த பரிதாபம்….

கட்டுமான தளத்தில் 40 மீட்டர் உயரத்தில் பாரந்தூக்கியில் இருந்த ஊழியருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், அவரால் சுயமாக கீழே இறங்க முடியவில்லை என்று சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்கு(SCDF) தகவல் கிடைத்தது.

இந்த சம்பவம் செப்டம்பர் 3-ஆம் தேதியன்று பிற்பகலில் சுமார் 2.25 மணியளவில் எண் : 71A,Tuas Nexus Drive இல் உள்ள கட்டுமான தளத்தில் நடந்தது.

சம்பவ இடத்திற்கு சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையின் பேரிடர் உதவி மீட்பு குழு விரைந்தது.ஏணியை பயன்படுத்தி பாரந்தூக்கியின் மேல் நிபுணர்கள் ஏறினர். அவரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஊழியரை ஸ்ட்ரெச்சரில் வைத்து அவரை கீழே இறக்கினர். ஊழியருடன் ஒரு நிபுணரும் இருந்தார்.அவரின் பாதுகாப்பை உறுதி படுத்த அவருடன் இருந்தார்.மீட்பு குழுவின் மருத்துவ உதவியாளர் ஊழியரை பரிசோதித்து பார்த்தார்.

அதன் பின் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.