திருவிழாவில் மதம் பிடித்த யானை!! அலறி ஓடிய மக்கள்!!

திருவிழாவில் மதம் பிடித்த யானை!! அலறி ஓடிய மக்கள்!!

இலங்கையில் திருவிழா ஒன்றில் மதம் பிடித்த யானை ஒன்று திடீரென ஓடிய சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தலைநகர் கொழும்பில் இருந்து 280 கிலோமீட்டர் தொலைவில் உள்ள kataragama மாவட்டத்தில் திருவிழா நடந்தது.

கச்சேரி, உரத்தை இசை, பட்டாசு என கலைகட்டிய திருவிழாவில் யானை ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது.

அதில், யானை ஒன்று திடீரென மதம் பிடித்து ஓடியது பக்தர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அலறியடித்து அங்கும் இங்குமாக ஓடினார்கள்.

இந்த மதம் பிடித்த யானையின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் யானையின் பாதுகாவலர் யானையை அடக்குவதற்கு வாலைப் பிடித்து இழுக்கும் காட்சிகளைக் காணலாம்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் வீடு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கையில் யானைகள் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன, ஆனால் மிருகவதைச் சட்டங்கள் அரிதாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுவதற்கு விலங்கு உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பட்டாசு,உரத்த இசை இருக்கும் இடத்தில் யானைகளுக்கு மதம் பிடிக்கும் வாய்ப்பு அதிகம் என்று கூறுகின்றனர்.