சிங்கப்பூரில் புக்கிட் திமா சாலையில் அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து!! சிதறி கிடந்த புத்தகங்கள்!! என்ன நடந்தது?
சிங்கப்பூரில் புக்கிட் திமா சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆறாவது அவென் யூவில் மார்ச் 6-ஆம் தேதி (இன்று) அதிகாலையில் பள்ளி பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி அசம்பாவிதம் ஏற்பட்டது.இந்த விபத்து சுமார் 6 மணியளவில் நிகழ்ந்தாக தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.
இச்சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது.
வெள்ளை நிற பள்ளி பேருந்தின் முன் சக்கரங்கள் இல்லாமல் இருப்பதையும், சாலைகளில் சிதறி கிடந்த புத்தகங்கள், பேருந்தின் உடைந்த முன்பக்க கண்ணாடி, குப்பைகள் உள்ளிட்டவைகளை அந்த வீடியோவில் காணலாம்.
இச்சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்தன.
போலீஸ் கார்கள், அதிகாரிகள் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை வீரர்கள் இருப்பதையும் காணலாம்.
பள்ளி பேருந்து இருக்கின்ற இடத்திலிருந்து சிறிது தூரம் பின்னால், கார் தீக்கு இரையாகி கொண்டிருப்பதையும் காண முடியும்.
இந்த விபத்து தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதில் கார் டிரைவரம் அடங்குவார்.
இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்