Scoot மலிவுக் கட்டண விமான நிறுவனத்தில் பணி புரியும் தகுதி பெறும் ஊழியர்களுக்கு 6 மாதத்திற்குமேல் போனஸ் வழங்கப்பட உள்ளது.
அதனை நேற்று scoot நிறுவனம் அறிவித்தது. நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஒன்றரை மாத போனசும்,திறமையின் அடிப்படையில் 4.76 மாத போனசும் அதில் அடங்கும்.
அதோடு, கடந்த மூன்று நிதி ஆண்டுகள் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 0.5 மாத நல்லெண்ண போனஸ் அல்லது அதிகபட்ச 1.5 மாத போனஸ் தகுதிபெறும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று CNA – விடம் scoot நிறுவனம் கூறியது.
இந்த போனஸ் ஊழியர்களின் அர்ப்பணிப்பு,கடின உழைப்பு, தியாகம் ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படுவதாக குறிப்பிட்டது.
மொத்தமாக 26.5 மில்லியன் பயணிகளுக்கு நிதி ஆண்டில் SIA நிறுவனமும்,Scoot நிறுவனமும் சேவை வழங்கி உள்ளது.அதற்கு முந்தைய ஆண்டை விட 6 மடங்கு அது அதிகம்.