Financial Times நாளேடில் Face Book தளத்தை நிர்வகிக்கும் Meta நிறுவனம் மேலும் ஒரு அறிவிப்பைத் தெரிவித்துள்ளது.அதன் வேலைகளை மேலும் குறைக்க போவதாக அறிவித்துள்ளது.
இந்த முடிவு குழப்பத்தை தருவதாக ஊழியர்கள் கூறியதாக நாளேடில் குறிப்பிட்டு இருந்தது.
கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. பணி நீக்கம் செய்த நிலையில் புதிதாக மற்றும் ஒரு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது.
இனி வர போகிற வாரங்களுக்குத் திட்டமிட முடியாததால் எந்த ஒரு வேலையும் செய்ய முடியவில்லை என்பது ஊழியர்களின் ஆதங்கம் என்று கூறியுள்ளது.
2023-ஆம் ஆண்டு செயல்திறன் மிக்க ஆண்டாக இருக்கும் என்று META நிறுவனத்தின் தலைமை அதிகாரி இதற்கு முன் வர்ணித்திருந்தார்.
ஆனால், தற்போதைய சூழ்நிலை தாறுமாறாக இருக்கிறதாக ஊழியர்கள் கூறியுள்ளனர்.
META நிறுவனம் Whatsapp செயலியையும் நிர்வகிக்கிறது.கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆயிரத்துக்கு அதிகமான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்தது.
இந்த ஆட்குறைப்பானது ஊழியர்கள் எண்ணிக்கையில் 13 விழுக்காடாகும்.