இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதியதால் விபத்தா? காரணம் என்ன? ஒருவர் சடலம் மீட்பு? 7 பேரின் நிலை என்ன?

இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதியதால் விபத்தா? காரணம் என்ன? ஒருவர் சடலம் மீட்பு? 7 பேரின் நிலை என்ன?

இரண்டு ஜப்பானிய ராணுவ ஹெலிகாப்டர்கள் ஏப்ரல் 21ம் தேதி(நேற்று) பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கடலில் விழுந்து நொறுங்கியது.

இறந்த உடல் ஒன்று கண்டறியப்பட்டது.ஹெலிகாப்டர்களில் இருந்த 8 பேர்களில் ஒருவரின் உடல் என்பது உறுதியானது.மேலும் 7 பேர் இன்னும் காணவில்லை.அவர்களை தேடும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தை பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

ஹெலிகாப்டர்களின் பாகங்கள் கடலில் கண்டெடுக்கப்பட்டதாக கூறினார்.

இரண்டு ஹெலிகாப்டர்களும் நேருக்கு நேர் மோதியதால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பசிபிக் பெருங்கடலில் உள்ள இசு தீவுகளுக்கு அருகில் நிகழ்ந்தது.ஒரு ஹெலிகாப்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவசர சமிக்ஞை ஏற்பட்டது.

SH-60 என்ற ஹெலிகாப்டர்கள் ஜப்பானின் கடல்சார் தற்காப்புப் படையால் பயன்படுத்தப்படுகின்றன.

வேறு எந்த விமானமும், கப்பல்களும் அருகில் இல்லை, இந்த விபத்திற்கு வேறொரு நாட்டின் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என்று கூறினார்.

இந்த விபத்திற்கான காரணம் விசாரணையில் தெரிய வரும் என்றும் கூறினார்.