சிங்கப்பூரில் வேலையிடத்தில் ஏற்பட்ட விபத்து!! சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்!!
சிங்கப்பூர் மற்றும் ஜொகூர் பாரு இடையே RTS விரைவு ரயில் சேவையின் கட்டுமான பணியின் போது வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் மற்றொரு ஊழியருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஜூன் 27-ஆம் தேதி நிகழ்ந்தது.
அவர்கள் இரும்பு கம்பிகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது கம்பிகள் ஆட்டங்கண்டு ஊழியர்கள் மீது விழுந்தது.
இதனால் அவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது.
சுமார் 9.30 மணியளவில் அவர்கள் மீது கம்பிகள் விழுந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
RTS விரைவு ரயில் சேவை விரைவில் வரவுள்ளது. அதற்கான பணிகள் உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்தின் வேலையிடத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அந்த விபத்து இந்த வேலையிடத்தில் நிகழ்ந்தது என ஆணையம் CNA விடம் தெரிவித்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கும், காவல்துறைக்கும் இச்சம்பவம் குறித்து காலை 9.50 மணியளவில் தகவல் வந்ததாக தெரிவித்தது.
இந்த விபத்தில் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்(49).
உட்லண்ட்ஸ் ஹெல்த் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் பொழுது சுயநினைவின்றி இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
காயமடைந்த மற்றொரு ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்.
Follow us on : click here