கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்து!! பரிதாபமாக உயிரிழந்த 2 ஊழியர்கள்!!
நெதர்லாந்தில் கட்டுமானத்தில் இருந்த பாலம் இடிந்து விழுந்தது.
இதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இருவர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த துயர சம்பவம் பிப்ரவரி 21 ஆம் தேதி அன்று நடந்தது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்த தகவல் தெளிவாகத் தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.