அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து..!! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர்…!!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து..!! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர்...!!

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமும் மோதி விபத்துக்குள்ளானதற்கு சிங்கப்பூர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் 67 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 60 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

ராணுவ ஹெலிகாப்டரில் இருந்த 3 அதிகாரிகளும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் சீனாவைச் சேர்ந்த இருவரும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிங்கப்பூரர்கள் காயம் அடைந்ததாக எந்த தகவலும் இல்லை என்று வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

விபத்து தொடர்பாக அமெரிக்க அரசு மற்றும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக சிங்கப்பூர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாஷிங்டனில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறியது.

அங்கு உயிரிழந்தோரின் சடலங்களை மீட்கும் பணியானது தொடர்கின்றது.

இதுவரை 41 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

விபத்து காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பாதைகளில் இனி பெரும்பாலான ஹெலிகாப்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan