பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து விலகும் அமெரிக்கா!!

பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து விலகும் அமெரிக்கா!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாரிஸ் பருவநிலை உடன்பாட்டில் இருந்து அமெரிக்கா விலகுவதாக தெரிவித்துள்ளார்.

அந்த உடன்பாடு போலியானது என்றும் அவர் கூறியுள்ளார்.

இரண்டாவது முறையாக அதிபர் ட்ரம்ப் அவ்வாறு முடிவு எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான்,லிபியா,ஏமன் ஆகிய நாடுகள் மட்டுமே பாரிஸ் உடன்பாட்டில் பங்கேற்கவில்லை என்றும் அந்த பட்டியலில் அமெரிக்காவும் சேர்ந்திருந்தது.

2015 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையின் கீழ் உலக வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்தவும், பருவநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை தவிர்க்கவும் நாடுகள் ஒப்புக்கொண்டன.

“நியாயமற்ற பாரபட்சமான உடன்படிக்கையில் இருந்து அமெரிக்காவை உடனடியாக மீட்டுக்கொள்கிறேன்” என்று உத்தரவில் கையொப்பமிடுவதற்கு முன் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் எண்ணெய்,எரிவாயு நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட எந்த விதிமுறைகளும் தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் அவரது எண்ணமாகும்.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg