சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் அமெரிக்கா...!!!!
அமெரிக்காவில் கடந்த நிதியாண்டிலிருந்து 270,000க்கும் அதிகமான குடியேறிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் இருந்து லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறிய நிலையில் இந்த கணக்கு வெளியிடப்பட்டது.
அமெரிக்க குடிவரவு சேவையின் அறிக்கை ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் வெளியிடப்பட்ட கடைசி ஆண்டு அறிக்கை என்று AFP தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையானது கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிகம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட பெரும்பாலானோர் தெற்கு எல்லையை கடந்து நாட்டிற்குள் நுழைந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.
அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒரு குற்றத்திற்காக தண்டனை பெற்றவர் அல்லது கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்பவர்களின் எண்ணிக்கை 11 முதல் 15 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Follow us on : click here