அமெரிக்கா : பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்திய 15 வயது மாணவி…!!

அமெரிக்கா : பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்திய 15 வயது மாணவி...!!

அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் அங்கு படித்த இளம்பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

15 வயது மாணவி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

அவர்களில் ஒருவர் மாணவர் என்றும் இன்னொருவர் ஆசிரியர் என்றும் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் மேலும் 6 மாணவர்கள் காயமடைந்தனர்.

அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பள்ளிக்கு வருவதற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவியும் உயிரிழந்துள்ளார்.

அதிகாரிகள் யாரும் அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை.

துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் தெரியவில்லை.

சந்தேகத்தின் பேரில் அவரது குடும்பத்தினர் விசாரணையில் போலீசாருக்கு உதவி வருகின்றனர்.

இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.