ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த Amazon நிறுவனம்..!!
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் திடீரென Amazon ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊழியர்களின் கோரிக்கைகளை நிறுவனம் நிறைவேற்ற மறுத்ததால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்ல சம்பளம் மற்றும் பணிச்சூழல் வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Teamsters எனும் நிலைகளில் சுமார் 10,000 தொழிலாளர்கள் உள்ளனர்.
அவர்கள் அமெரிக்காவில் 10 அமேசான் கிடங்குகளில் வேலை செய்கிறார்கள்.
ஊழியர்களின் தற்காலிக பணிநிறுத்தம் அமேசானின் செயல்பாடுகளை வெகுவாக பாதிக்கும்.
மேலும் வருட தொடக்கம் மற்றும் கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகளின் பரபரப்பான நேரத்தில் அவ்வாறு செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கம் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Follow us on : click here