குரங்குகள் பற்றிய அற்புதமான உண்மை தகவல்கள்..!!!!

குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்ற வரலாறு உண்டு. இதிகாச புராணமான ராமாயணத்தில் கூட குரங்கினம் முக்கியத்துவம் வாய்ந்ததாக காட்டப்பட்டது. தென்னிந்தியாவில் குரங்கை ஆஞ்சநேய கடவுளாக வழிபடுவது உண்டு.இன்றளவும் கூட குரங்குகளை கண்டால் குழந்தைகள் துள்ளி குதிப்பதுண்டு.பொருட்களை பத்திரமாக வைத்திருக்காதவர்களுக்கு கூட “குரங்கு கையில பூ மாலை கொடுத்தது போல்” என்ற பழமொழியை பெரியவர்கள் கூறுவது உண்டு.குரங்குகளுக்கு மிகப் பிடித்த பழமாக வாழைப்பழம் அறியப்படுகிறது. குரங்குகளின் பாதுகாப்பிற்காக உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14ஆம் தேதி குரங்குகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அப்படிப்பட்ட குரங்குகளை பற்றி சில தகவல்கள் இதோ உங்களுக்காக…
உலகம் முழுவதும் மொத்தம் 360 வகையான குரங்குகள் உள்ளன.
▫️குரங்குகள் காடுகளில் சுமார் 10 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
▫️குரங்கு மிக சுறுசுறுப்பான புத்திசாலி உயிரினம்.
▫️குரங்கிற்கு மொத்தம் 32 பற்கள் உள்ளன.
▫️குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயல்பட வைக்கிறது.
▫️குரங்குகள் எண்களை அடையாளம் காணும் திறன் கொண்டது.
▫️குரங்குகளின் DNA ஆனது மனிதர்களின் DNA உடன் 98 சதவீதம் பொருந்துகிறது.
▫️விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் குரங்கின் பெயர் “ஆல்பர்ட் II”
▫️குரங்குகளிலேயே படாஸ் வகை குரங்கு மணிக்கு 50 கிலோமீட்டர் வேகும் வரை செல்லக்கூடியது.
உலகிலேயே மிக உயரமான குரங்கினமாக மான்ட்டரில் வகை குரங்கினம் அறியப்படுகிறது. இது சுமார் 3 அடி உயரமும் 35 கிலோகிராம் எடையும் கொண்டதுமாக இருக்கும்.
▫️சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குரங்கினம் பர்மியத் தும்பல் ஆகும்.இவை மழை பெய்யும் போதெல்லாம் தொடர்ந்து தும்மக் கூடியது.
▫️ஸ்பைடர் பெண் குரங்கின் வாலானது தனது உடல் நீளத்தை விட அதிகமாக இருக்கும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan