தாய்லாந்தில் அதிசய நிகழ்வு!! இரட்டை யானை குட்டிகளை ஈன்றெடுத்த யானை!!

தாய்லாந்தில் அதிசய நிகழ்வு!! இரட்டை யானை குட்டிகளை ஈன்றெடுத்த யானை!!

தாய்லாந்து: மத்திய தாய்லாந்தில் உள்ள 36 வயதான சாம்சூரி யானை கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது. இது ஒரு அதிசயம் என்று பராமரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
சாம்சூரிக்கு முதலில் ஆண் குட்டி பிறந்தது, அயுதயா யானைகள் அரண்மனை மற்றும் ராயல் க்ரால் ஊழியர்கள் பிரசவம் முடிந்து விட்டது என்று எண்ணினர்.ஆனால் யாருமே எதிர்பார்க்கவில்லை. அடுத்ததாக ஓர் அதிசயம் நிகழப்போவது என்று அவர்களுக்கு தெரியாது.சற்று நேரத்தில் யானை மீண்டும் வலியில் பிளிறியது.அதன் பின் இரண்டாவதாக பெண் குட்டியை ஈன்றது.

பிரசவ வலியில் பிளிறியதால் அதன் அருகே இருந்த ஆண் யானை குட்டியை மிதித்து விடுமோ என்ற அச்சத்தில் அதை கட்டுப்படுத்த பராமரிப்பாளர் முற்பட்டனர்.

அப்போது பராமரிப்பாளர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. யானைகளில் ஒரு சதவீதம் மட்டுமே இரட்டை குழந்தைகள் பிறக்கும் நிகழ்வு நிகழ்கிறது.

ஆனால் ஒரே பிரசவத்தில் ஆண்,பெண் என இரண்டு குட்டிகள் பிறப்பது மிகவும் அரிது என்று சேவ் தி எலிஃபண்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது.

31 வயதுடைய சாரின் சோம்வாங் தாயைக் கட்டுப்படுத்தும் போது அவரது கால் உடைந்தது. அவர் இரட்டை யானை குட்டிகள் பிறந்த மகிழ்ச்சியினால் அதை பொருட்படுத்த வில்லை என்று கூறினார். தாய்லாந்தில் யானைகளை புனிதமாக பார்க்கின்றனர்.

இரட்டை யானை குட்டியைக் காண பூங்காவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.