தெற்கு பிரேசிலில் கிட்டத்தட்ட 1000 நீர் நாய்கள் மற்றும் கடல் சிங்கங்கள் பறவைக் காய்ச்சலால் இறந்துள்ளன.
மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளை இந்த பாதிப்பிலிருந்து தடுக்க இறந்த உயிரினங்களை எரிக்கவோ அல்லது புதைக்கவோ வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இந்த வைரஸ் கடல் பாலூட்டிகளின் நரம்பு மண்டலத்தை தாக்குவதால், அவற்றின் வலி கொடுமையாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட விலங்குகளை கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் இந்த வைரஸ் தொற்று பெருவில் தொடங்கி தென் அமெரிக்கா, சிலி, அர்ஜென்டினா, உருகுவே ஆகிய நாடுகளில் உள்ள விலங்குகளை தாக்கியதாகவும் தெரிவித்தனர்.