மே 2-ஆம் தேதி தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில் தனியார் விமான நிறுவனமான Go First நிறுவனம் தானாக முன்வந்து திவால் நடைமுறைக்கு மனு அளித்திருந்தது.
அந்நிறுவனம் தற்போது திவால் நிலைக்கு செல்லும் அபாய நிலையில் உள்ளது.
விமான இன்ஜீன்களை அமெரிக்காவில் செயல்படும் பிடபிள்யூ என்றழைக்கப்படும் பிரட் அண்ட் விட்னி நிறுவனத்திடமிருந்து முறையாக விநியோகிக்கப்படாததால் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
இதனால் விமான நிலையங்களுக்கான கட்டணம், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியது.
அதோடு,கடும் இழப்பையும் சந்தித்துள்ளதாக தெரிவித்தது.
திவால் ஆகும் நிலைக்கு ஆளாகி இருக்கும் நிலையில் மே-9 ஆம் தேதி வரை அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கு முன், மே 3,4 தேதிகளில் ரத்து செய்வதாக நிறுவனம் அறிவித்தது.அதன்பின், மே 5-ஆம் தேதி வரை நீட்டித்தது.
நிறுவனம் அதனை அடுத்த செவ்வாய் கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதோடு, மே 15 – ஆம் தேதி வரை விமானங்களுக்கான புதிய டிக்கெட் விற்பனையை Go First விமான நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.
இது தொடர்பாக Go First விமான நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.செயல்பாட்டு காரணங்களால் மே 9-ஆம் தேதி வரை Go First நிறுவன விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. இதனால் ஏற்பட்ட சிரமத்துக்கு நாங்கள் விரைவில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். விரைவில் டிக்கெட் தொகை திருப்பி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தது.
மேலும், உடனடியாக டிக்கெட்டுகளைத் திருப்பி வழங்குமாறு Go First நிறுவனத்துக்கு Directorate General Of Civil Aviation (DGCA) உத்தரவிட்டுள்ளது.