நவம்பர் 5ஆம் தேதி அன்று, 34 வயது உடைய துருக்கியை சேர்ந்த நபர் ஒருவர், அவரது 4 வயது மகளை ஜெர்மனியின் ஹாம்பர்க் விமான நிலையத்தில், விமானங்கள் நிறுத்தப்படும் பகுதிக்கு காரில் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அவர் தனது குழந்தையை பணைய கைதியாக வைத்திருந்தார்.
குழந்தையின் தாய், தனது மகளை அந்த நபர் கடத்தியதாக காவல் துறையினருக்கு அவசர அழைப்பு விடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தையின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், அதிகாரிகள் பொறுமையாக கையாண்டனர்.
இதனை அடுத்து அந்த விமான நிலையம் மூடப்பட்டதாக அவர்கள் கூறினர்.
மேலும் அந்த நபரிடம் துப்பாக்கி மற்றும் வெடிக்கும் சாதனங்கள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குழந்தையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அந்த நபருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக அவர்கள் கூறினர்.
காவல்துறையினர் அந்த நபரை கைது செய்யும் பொழுது, அவர் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பல மணி நேரத்துக்கு பிறகு நிலைமை, ஞாயிற்றுகிழமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
காவல்துறை அவரைக் கைது செய்தது.