கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய AirAsia விமானம்..!!

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய AirAsia விமானம்..!!

சீனாவின் ஷென்ஜென் நகருக்குச் சென்று கொண்டிருந்த AirAsia விமானம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தின் வலது இயந்திரத்தில் தீப்பிடித்ததால் அது அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நேற்று இரவு 10.37 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகத் தெரிவித்தது.

ஒன்பது தீயணைப்பு வீரர்களும் ஒரு தீயணைப்பு வாகனமும் உடனடியாக ஓடுபாதைக்கு அனுப்பப்பட்டதாகத் மீட்புத்துறை தெரிவித்தது.

விமானத்தில் Pneumatic என்ற குழாய் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விமானம் தரையிறங்குவதற்கு முன்பு ஹாலோன் அமைப்பு இயந்திரத்தில் ஏற்பட்ட தீயை முற்றிலுமாக அணைத்தது.

விமான நிலையத்திலிருந்து இரவு 9.59 மணிக்குப் புறப்பட்ட AK128 விமானம், அதிகாலை 12.08 மணிக்குப் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

விமானத்தில் 171 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தரை இறங்கினர்.